24xnews தமிழ்

உண்மை! நேர்மை! நடுநிலைத் தன்மை!

24xnews தமிழ்

Latest Postஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
மனிதவள மேம்பாட்டில் பொருளாதார மற்றும் அணு ஆயுத வல்லரசு நாடுகளை பின்னுக்கு தள்ளிய இலங்கை

சர்வதேச நாடுகளின் 2016-ம் ஆண்டுக்கான மனித வள மேம்பாடு பட்டியலை ஐ.நா. சபை வளர்ச்சி திட்டம் வெளியிட்டுள்ளது. அதில் 188 நாடுகள் இடம் பெற்றுள்ளன. அந்நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயர்வு, கல்வி, மற்றும் தனி நபர் வருமானம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் இடத்தில் நார்வே
அதில் நார்வே முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், சுவிட் சர்லாந்து 3-வது இடத்திலும் உள்ளன. ஆனால் இந்தியா 131-வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் அண்டைநாடுகளான இலங்கை 73-வது இடத்திலும் மாலத்தீவுகள் 105-வது இடத்திலும் உள்ளன. கபான் 109-வது இடத்தில் உள்ளது.


பாக்.கிற்கு 147-வது இடம்
எகிப்து 111-வது இடத்திலும், இந்தோனேசியா 113-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 119-வது இடத்திலும், ஈராக் 121-வது இடத்திலும் உள்ளன. சீனா 90-வது இடம் பிடித்துள்ளது. பூடானுக்கு 132-வது இடமும், வங்காள தேசத்துக்கு 139-வது இடமும், நேபாளத்துக்கு 144-வது இடமும், பாகிஸ்தானுக்கு 147-வது இடமும் கிடைத்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB-PAGEயை லைக்  செய்யவும்
Like

பயங்கர சத்தத்துடன் விழுந்த மர்ம ஒளி

வேலுர்: வானியம்பாடி அருகே அதிகாலையில் வீடு ஒன்றின் மீது பயங்கர சத்தத்துடன் ஒரு மர்ம ஒளி விழுந்தது. இதில் அந்த வீட்டின் மேற்கூரை துள் தூளாக நொறுங்கியது.

வீட்டில் இருந்த பெண் ஒருவரும் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வானியம்பாடியை அடுத்த துருங்கி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். லாரி ஓட்டுநரான இவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றுள்ளார்.

பயங்கர சத்தத்துடன் விழுந்த மர்ம ஒளி
அவரது மனைவி புவனேஷ்வரி வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் அவரது வீட்டின் மீது பயங்கர சத்தத்துடன் அவரது வீட்டின் மீது மர்ம ஒளி ஒன்று விழுந்தது.
 
பெண்ணுக்கு பலத்த தீக்காயம்
இதில் வீட்டின் மேற்கூறை நொறுங்கி தூள் தூளானது. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன.இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த புவனேஷ்வரி பலத்த தீக்காயம் அடைந்தார்.
 
நொங்கிய வீடு
பலத்த சத்தம் கேட்டு அங்கு திரண்ட கிராம மக்கள் வீடு முற்றிலும் சேதமடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.மேலும் பலத்த தீக்காயத்துடன் போராடிய புவனேஷ்வரியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இடியை போன்ற பலமடங்கு சத்தம்
புவனேஷ்வரியின் கணவர் வெங்கடேசன் வீட்டில் இல்லாததால் அவர் உயிர் தப்பினார். எரிக்கல் போன்று இடியை போன்ற பல மடங்கு சத்தத்துடன் ஒரு ஒளி வீட்டின் மீது விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

வானியல் விஞ்ஞானிகள் ஆய்வு
இதுகுறித்து வானியர் விஞ்ஞானிகள் அங்கு ஆய்வு செய்து வருகின்றனர். சக்தி வாய்ந்த எரிகல் ஏதேனும் வீட்டின் மீது விழுந்ததா என்றும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
 
கடந்த ஆண்டு விழுந்த எரிகல்
இதே வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எரிகல் ஒன்று விழுந்த சம்பவத்தில் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2 பேர் பலத்த காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB-PAGEயை லைக்  செய்யவும்
Like

No automatic alt text available.

கனடா நாட்டின் பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்தில் புடவை விலகிய தமிழ் மணப்பெண்ணின் படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பி வருகிறது.

Jodi Bridal என்ற பத்திரிகை இவ்வாறு வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான Jodi Bridal வார இதழில் தமிழ் மணப்பெண்கள் பற்றிய கட்டுரை ஒன்று சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

அதன் அட்டைப்படத்தில் மணப்பெண் அடிப்பாதம் வரை கால்களை வெளிக்காட்டியபடி புடைவையை ஒரு புறம் மட்டுமே அணிந்துள்ளார். இதற்கு தமிழர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது போல சேலை அணிந்த தமிழ் மணப்பெண் ஒருவரை எங்கேனும் காண்பிக்க முடியுமா?... தமிழ் கலாச்சாரத்தை கேலி செய்கிறார்கள்” என்று கொதித்திருக்கிறார் ஒரு தமிழ் வாசகர்.

அதேசமயம் அட்டைப்படத்திற்கு மாடலாக இருந்த தனுஸ்கா சுப்ரமணியம் உட்பட அதன் கலைஞர்கள் முதல் பலரும் இப்படத்தை ஆதரித்தும் பேசி வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB-PAGEயை லைக்  செய்யவும்
Likeகேரளாவில் அதிகரித்து வரும் பாலியல் கொடுமைகள் காரணமாக, அச்சம் அடைந்த பன்னிரெண்டு வயது பள்ளிச் சிறுமி ஒருவர், அம்மாநில முதல்வருக்குப் பாதுகாப்பு கோரி கடிதம் எழுதி இருக்கிறார். மிகவும் உருக்கமும் அச்சமும் நிறைந்த வரிகளில் எழுதப்பட்ட அந்தக் கடிதம், தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் கேரளாவில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில், கேன்சரால் பாதிக்கப்பட்ட 90 வயது பெண்மணியைப் பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் கொடுமை செய்தது அதிர்வு அலையை உண்டாக்கியது. கடந்த மாதம், திரைப்பட நடிகை பாவனாவை காரில் கடத்திச் சென்ற ஒரு கும்பல், பாலியல் தொந்தரவு செய்தது.

ராபின் வடக்கஞ்சேரி என்கிற பாதிரியார், பதினேழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, ஒரு குழந்தைக்கு தாயாக்கிவிட்டார். அவரை போலீஸார் பிப்ரவரி இறுதியில் கைது செய்தனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கொல்லம் மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவர், வீட்டில் தூக்கில் தொங்கினார். அடுத்த சில வாரங்களில் அதே இடத்தில் அவரது ஒன்பது வயது சகோதரியும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் கேரள சட்டமன்றத்தில் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து, முதல்வர் பினராயி விஜயன், குற்றப் புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட்டார். அதில், சகோதரிகள் இருவருமே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதத்தில், கொல்லம் மாவட்டம் குண்டாரா என்ற இடத்தில் பத்து வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டார். ‘எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. வாழப் பிடிக்காததால் சாகிறேன்’ எனக் கடிதம் எழுதப்பட்டு இருந்தது. இதனால், அந்த வழக்கைத் தற்கொலை என போலீஸார் முடித்துவிட்டனர். ஆனால், அந்தச் சிறுமியின் உடலை ஆய்வுசெய்த மருத்துவர்கள், உடலில் இருபது காயங்கள் இருந்ததையும், சிறுமி இறப்பதற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதையும் கண்டுபிடித்தனர். இந்த விவகாரம் கேரளாவில் சர்ச்சையைக் கிளப்பியது. உயர் அதிகாரிகள் தலையிட்டு விசாரித்தபோது, அந்த தற்கொலைக் கடிதம், சிறுமியின் பள்ளி நோட்டுப் புத்தகத்தில் இருந்த கையெழுத்துடன் ஒத்துப்போகவில்லை. அதனால், இந்த விவகாரத்தில் கவனக்குறைவுடன் செயல்பட்டதற்காக சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, எஸ்.பி தலைமையில் தீவிர விசாரணை நடந்தது. அதில், அந்தச் சிறுமியின் தாத்தாவே பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையில், அந்தப் பகுதியில் உள்ள பல குழந்தைகளை பாலியல் கொடுமை செய்தது வெளியாகி அதிரவைத்தது. அந்தக் கிழட்டு மிருகத்தையும் அவருக்குத் துணையாக இருந்த மனைவியையும் கைது செய்தனர்.

இப்படி நாள்தோறும் நடக்கும் சம்பவங்கள், கேரளாவில் பெண்களிடமும் சிறுமிகளிடமும் பீதியைக் கிளப்பி உள்ளது. பள்ளி, கல்லூரிக்குச் சென்று வீடு திரும்பும் வரை பெண்ணைப் பெற்றவர்கள் பதைபதைத்துக் கிடக்கிறார்கள். பொது இடங்களுக்குச் செல்லவே சிறுமிகள் அஞ்சுகிறார்கள். இந்த நிலையில்தான் ஏழாம் வகுப்புப் படிக்கும் மாணவியான அனந்தரா, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுது உள்ளார். உணர்ச்சிக் கொந்தளிப்புடன் எழுதப்பட்ட அந்தக் கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்தக் கடிதத்தில்...

'கேரளாவில் தற்போது நடக்கும் சம்பவங்கள் எனக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. என்னைச் சுற்றிலும் ஏதேதோ நடக்கிறது. அவை பீதியையும் வேதனையும் ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. என்னைச் சுற்றிலும் இருக்கும் சமூகத்தில் நான் பய உணர்வுடனேயே வாழவேண்டிய நிலையில் இருக்கிறேன். எனது வயதுடைய சிறுமிகளுடன் நிம்மதியாக விளையாட முடியவில்லை. நான் வழக்கமாக விரும்பிச் செல்லும் இடங்களுக்குச் செல்ல முடியவில்லை. பள்ளிக்குச் செல்வதிலும் நிம்மதி இருக்கவில்லை. பயத்துடனேயே செல்லும் மனநிலையில் இருக்கிறேன். இப்போது நிலவும் சூழல் காரணமாக, எனது குழந்தைமையை இந்தச் சமூகம் திருடிக்கொள்வதாகவே நான் நினைக்கிறேன். பல இரவுகளில் என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. எப்போதும் மன அழுத்தத்துடனேயே வாழவேண்டிய நிலையில் இருக்கிறேன். எனது சுதந்திரம் முழுமையாகப் பறிபோய்விட்டதாகவே நினைக்கிறேன்.

கொல்லம் மாவட்டம், வாலையாறு பகுதியில் கீர்த்திகா, சரண்யா என்ற சகோதரிகள் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டனர். அதில் மூத்தவளான கீர்த்திகாவுக்கு எனது வயதுதான். என் வயதில் உள்ள ஒரு சிறுமிக்கு நேர்ந்த அவலத்தை நினைத்துப் பல இரவுகள் வேதனையில் தனிமையில் அழுது இருக்கிறேன். இப்படியான சோகத்துக்கு மத்தியில் என்னால் எப்படி நிம்மதியாகத் தூங்க முடியும்? சம வயது உள்ள ஒரு சிறுமிக்கு நேர்ந்த கொடூரம், எனக்கும் நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? குண்டாராவில் ஒரு சிறுமிக்கு நேர்ந்த கொடுமை உங்களுக்குத் தெரியும்தானே? ஒரு தாத்தாவால் தனது பேத்திக்கு இதுபோன்ற கொடுமையைச் செய்ய எப்படி மனம் வருகிறது? இப்படி ஒரு செய்தியைக் கேள்விப்பட்டதும் நம்பவே முடியவில்லை. இப்படி எல்லாம்கூடவா நடக்கும் முதல்வர் அவர்களே? இந்தச் சமூகம் அந்த அளவுக்குக் கொடூரமானதாகவா மாறிவிட்டதா?

நான் உங்களிடம் வேண்டி விரும்பிக் கேட்பதெல்லாம், எனக்குச் சுதந்திரமாக இருக்கும் உரிமையைப் பெற்றுக்கொடுங்கள் என்பதுதான். நான் எப்போதும் போல சாதாரணமாக வாழ வேண்டும். பயந்துகொண்டே இருக்கக் கூடாது. சக சிறுமிகளுடன் மகிழ்ச்சியாக விளையாடி, ஓய்வான நேரத்தைப் பிறருடன் சேர்ந்து சந்தோசமாக செலவிடும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். எனது வயதில் எனக்குக் கிடைக்க வேண்டிய சந்தோஷத்தை யாருக்காகவும் எதற்காகவும் இழக்கக் கூடாது. அதற்கான உத்திரவாதம் கிடைக்க வேண்டுமானால், குழந்தைகளிடம் வரம்பு மீறிச் செயல்படுபவர்களுக்கு நீங்கள் மிகக் கடுமையான தண்டனைக் கொடுக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் சட்டம் இயற்றுங்கள். அப்படிச் செய்தால் மட்டுமே, என்னைப் போன்ற சிறுமிகள் சுதந்திரத்துடன் எங்களின் வயதுக்கான மகிழ்ச்சியைப் பெறமுடியும். எங்களின் கனவுகள் நினைவாக்க முதல்வராகிய உங்களால் மட்டுமே முடியும். எங்கள் நலனைப் பாதுகாக்க நீங்கள் மனதுவைப்பீர்களா முதல்வர் சார்?' என உருக்கமாகக் கடிதத்தை முடித்துள்ளார், சிறுமி அனந்தரா.

இது கேரளாவுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எழுதப்பட்ட கடிதம் என்பதில் சந்தேகமில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB-PAGEயை லைக்  செய்யவும்
Like

ஈவு இரக்கமே இல்லாமல் பெற்ற தாயிடம் பெண்கள் பேரம் பேசிய நியாநானா நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களையும் அந்த நிகழ்ச்சியை நடத்திய கோபிநாத்தையும் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார் ஒரு பெண்.

இப்படி கேள்வி கேட்பதும் ஒரு பெண் தான் என்பது பாராட்டிற்குரியது, நிகழ்ச்சியை பார்த்து விட்டு என் மனதில் ஏற்பட்ட அனைத்து குமுறல்களைம் இந்த பெண் கொட்டி தீர்த்து விட்டார் என வாழ்த்து தெரிவித்து  நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB-PAGEயை லைக்  செய்யவும்
Like

Image may contain: text

கன்னியாகுமரி: தக்கலை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் கல்லூரி மாணவிகள் 5 பேர் உயிழந்துள்ளனர். கல்லூரி வேன் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் புலியூர்குறிச்சியில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். 18 பேர் சென்ற கல்லூரி வேன் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் சுங்காங்கட்டையில் உள்ள ஐயப்பா கல்லூரியில் படித்து வந்தவர்கள்.

தீபா, சிவரஞ்சனி, மஞ்சு உள்ளிட்ட 4 மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB-PAGEயை லைக்  செய்யவும்
Like

Image result

அமெரிக்கா, அலஸ்காவை சேர்ந்த உள்நாட்டு சேவை விமானம் ஒன்று பறந்து கொண்டிருக்கும் நிலையில் அதன் கேப்டனிடமிருந்து ஒரு அறிவிப்பு வருகிறது, விமானத்தின் முந்தைய பயணத்தில் பயணித்த ஒருவர் தன்னுடைய வளர்ப்பு பாம்பை விமானத்தில் மறந்துவிட்டுச் சென்றுள்ளார். எனவே பயணிகள் கவனமாக இருக்கவும் என எச்சரிக்கின்றார்.

கேப்டனின் எச்சரிக்கையை தொடர்ந்து உஷாரான சிறுவன் ஒருவனின் இருக்கையின் கீழ் அந்தப் பாம்பு சுகமாக உறங்கிக் கொண்டிருந்ததை கண்டுபிடித்து தெரிவித்ததை தொடர்ந்து, தூங்கு மூஞ்சிப் பாம்பு (Slumbering Snake) என பெயர் கொண்ட விஷதன்மையில்லாத அந்தப் பாம்பை விமானப் பணியாளர் ஒருவர் பிடித்து பை ஒன்றுக்குள் சிறைவைக்க, விமானம் எந்தத் தடங்கலும் இன்றி தொடர்ந்து பறந்து இலக்கை அடைந்துள்ளது.

இந்த பாம்பு பிடி சம்பவங்கள் அனைத்தையும் பயணிகள் பயப்படாமல் கூடிநின்று ரசித்ததும், அனுமதியில்லாமல் அந்தப் பயணி பாம்பை கொண்டு வந்ததுடன் அதை மறந்துவிட்டுச் சென்றதுடன் நில்லாமல் அதை முறையாக விமான நிலையத்திலும் தெரிவித்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் ஹாஸ்யத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.

Source: Gulf News


பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB-PAGEயை லைக்  செய்யவும்
Like

Image may contain: one or more people and textதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுத்தெருவை சேர்ந்தவர் நெய்னா முகமது (45). வாகன ஓட்டுனர். இவருக்கு மனைவி, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு படிக்கும் 2 மகள்கள், 1 மகன் ஷாஹின் (2 ) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

குழந்தை ஷாஹினுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில் உப்பு நீர் அதிகரித்து இருப்பது தெரியவந்தது. இதனால் குழந்தையின் உடல் பருமன் அதிகரித்து, அடிக்கடி சளி, இழப்பு ஏற்படுவதும், கிட்னி பாதிப்படைந்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து குழந்தையின் தொடர் மருத்துவ சிகிச்சைக்காக இதுவரையில் பலரிடம் கடன் வாங்கி ரூ. 1 லட்சம் வரை செலவு செய்து உள்ளதாகவும், குடும்ப வாழ்வாதத்திற்காக தான் ஓட்டி வந்த வாகனம் திடீர் பழுது ஏற்பட்டதால் ஒர்க்ஸ் ஷாப்பில் நிறுத்தப்பட்டு சிலவாரங்கள் ஆகியும் தன்னால் கட்டணம் செலுத்திவிட்டு மீட்க முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மருத்துவரின் அறிவுரையின் பேரில் குழந்தைக்கு மாதம் ஒருமுறை ஊசி போடுவதற்கு ரூ. 4,500 வரை செலவு ஆகி வருவதாகவும், ஏழ்மை நிலையில் இருக்கும் தன்னால் மருத்துவ சிகிச்சை தொடர முடியாமல் தவித்து வருவதாக வருத்தத்துடன் தெரிவித்தார்.

இந்த குழந்தையின் தொடர் மருத்துவ சிகிச்சை செலவினங்களுக்காக குழந்தையின் தகப்பனார் நம்மிடம் உதவி கோரி உள்ளார்.

இக்குழந்தைக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக நெய்னா முகமது அவர்களிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள குழந்தையின் தகப்பனார் நெய்னா முகமது அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினம் நிதி சார்ந்த சேவை அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

நிதி உதவி கோரி குழந்தையின் தகப்பனார் நம்மிடம் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : NAINA MOHAMED. A
Bank Name : STATE BANK OF INDIA
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 20295534117

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 0091 9865753637

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB-PAGEயை லைக்  செய்யவும்
Like

Image may contain: one or more people

தான் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக நாடகமாடிய பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்ஸசில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

18 வயதான பீரியான ஹார்மன் டெல்பொட் என்ற பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் காணாமல் போயுள்ளதாக அவரது நண்பர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும் பின்னர் அவர் காயங்களுடன், இரத்தம் தோய்ந்த நிலையில் அரை நிர்வாணமாக தேவாலயமொன்றிற்கு வந்துள்ளார்.

தான் மூன்று ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞர்களால் கடத்தப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

பின்னர் விசாரணைகளின் போது எவ்வித தடயமும் கண்டுபிடிக்கப்படவில்லை, மேலும் மருத்துவ பரிசோதனைகளின் போதும் அவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளமைக்கான எவ்வித ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனவே இதனைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணைகளின் போது அப்பெண் தான் நாடகமாடியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

காயங்களையும் அவரே ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து அப்பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB-PAGEயை லைக்  செய்யவும்
Like

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget